[X] Close

என்னதான் சொல்கிறது ஷரியத் சட்டம்? - ஆப்கன் பெண்களின் நிலையை முன்வைத்து ஒரு பார்வை

சிறப்புக் களம்

Taliban-who-captured-Afghanistan-says-will-be-ruled-under-Sharia-law-and-What-about-the-future-of-the-women-there

(கோப்பு புகைப்படம்)


Advertisement

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பினர், ஷரியத் சட்டத்தின் படியே நாட்டில் ஆட்சி நடைபெறும் என தெரிவித்துள்ளனர். மேலும் அந்த சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு நாட்டில் உள்ள பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என சூளுரைத்துள்ளனர். இருந்தாலும் அந்த வரம்புக்கான எல்லை என்ன என்பது குறித்த தெளிவான விளக்கம் எதையும் அவர்கள் வெளியிடவில்லை. 

image


Advertisement

கடந்த 1996 முதல் 2001 வரை ஆட்சியில் இருந்த தலிபான்கள் அந்த காலகட்டத்தில் இதே ஷரியத் சட்டத்தின் கீழ் ஆட்சியை நடத்தினர். அப்போது ‘ஆண் துணையுடன் மட்டுமே பெண்கள் வீட்டை விட்டு வெளிவர வேண்டும், பள்ளிக்கோ அல்லது வேலைக்கோ போகக்கூடாது’ என சொல்லி இருந்தனர். மேலும் அதை மீறுபவர்களை துன்புறுத்தவும் செய்தனர். 

இந்த முறை ஷரியத் சட்டத்தை எப்படி அமல் செய்ய உள்ளனர் என்பதை தலிபான்கள் விளக்காமல் உள்ளனர். ஆனால் இப்போது கடந்த காலத்தை எண்ணி அங்குள்ள லட்சக்கணக்கான பெண்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். 

ஷரியத் சட்டம்?


Advertisement

புனித நூலான திருக்குர்ஆனை மூலமாக வைத்து அமைக்கப்பட்டது ஷரியத் சட்டம். இஸ்லாமிய வழக்கப்படி சீரிய வாழ்க்கைக்கு இந்த சட்டம் உதவுகிறதாம். 

ஷரியத்தின் விளக்கங்கள், சில பெண்களுக்கு உரிமைகளை வழங்க முடியும் என சொல்கிறது. அதே நேரத்தில் மற்ற சில விளக்கங்கள், பெண்களுக்குகான அந்த உரிமைகளை வெகு சிலவற்றாக குறைந்துள்ளன. உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் இந்த சட்டத்தின் கீழ் ஆட்சி நடைபெற்று வருகிறதாம். ஆனால் பெண் உரிமை விவகாரத்தில் சட்டத்தின் போர்வையில் தலிபான்கள் வரம்பினை மீறியுள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

ஷரியத்தை அடிப்படையாகக் கொண்ட அரசுகள் அதை வித்தியாசமாக செய்துள்ளன. தலிபான்கள் இந்த சட்டத்தின் கீழ் ஆட்சி என தெரிவித்துள்ளனர். ஆனால் அது சீரிய வாழ்க்கைக்கு உதவும் இஸ்லாமிய அறிஞர்கள் ஒப்புக்கொண்டதன் படி தான் இருக்கிறதா என்பதை சொல்ல முடியாது. 

image

ஷரியத் பரிந்துரைப்பது என்ன?

திருட்டு மாதிரியான குறிப்பிட்ட சில குற்றங்கள் சந்தேகத்திற்கு இடம் அளிக்காமல் நிரூபிக்கப்பட்டால், அதற்குரிய தண்டனைகள் ஷரியத் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதே போல எப்போது, எப்படி இறைவனை தொழுவது, திருமணம் செய்வது மற்றும் விவாகரத்து செய்வது போன்ற வழிகாட்டுதலையும் வழங்குகிறது.

ஆண் துணை இல்லாமல் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றோ அல்லது பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்றோ இந்த சட்டம் தடையிடவில்லை. 

இதற்கு முன்னதாக ஆப்கனில் ஷரியத் சட்டத்தின் கீழான தலிபான் ஆட்சி எப்படி?

தலிபான்கள் ஆட்சியில் ஆப்கன் இருந்தபோது தொலைக்காட்சி மற்றும் இசைக்கருவிள் பயன்பாட்டுக்கு தடை விதித்தனர். ஷரியத் சட்டத்தின் படி நல்லொழுக்கத்தை மேம்படுத்த பிரத்யேக துறை ஒன்றை அமைத்திருந்தனர்.

உடை கட்டுப்பாடு மாதிரியானவையும் அப்போது இருந்துள்ளன. சட்ட விதிகளை பின்பற்றாத பெண்களை துன்புறுத்தியுள்ளனர். 

கடந்த 1996-இல் காபூலை சேர்ந்த பெண் ஒருவர் விரலில் நெயில் பாலிஷ் பூசியிருந்த காரணத்தினால் அவரது விரலின் முனை வெட்டப்பட்டதாகவும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் தகவல் தெரிவித்துள்ளது. பாலியல் தொழில் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பெண்கள் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

image

அப்போது அங்குள்ள பெண்களின் நிலை இனி?

கடந்த முறையைபோல இந்த முறை எங்கள் ஆட்சி இருக்காது என தலிபான் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கான உரிமை வழங்கப்படும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தலிபான்களின் மனநிலை பெண்கள் விஷயத்தில் உண்மையாகவே மாற்றம் கண்டுள்ளதா என்பதை வல்லுனர் குழுவினர் கூர்ந்து கவனித்து வருகின்றனர். தலிபான் தலைவர்களின் நடவடிக்கைகளை அவர்கள் கண்காணித்து வருகின்றனர். 

தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் அண்மையில் பெண் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தது உதாரணமாக பார்க்கப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் மாறியுள்ளதை ஆப்கன் மக்களுக்கும், உலகுக்கும் வெளிக்காட்டி இருந்தனர் தலிபான்கள். 

ஆனால் இதெல்லாம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அந்த நாட்டின் ஊடக நிறுவனங்களில் பணியாற்றி வரும் பெண்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளதாக தலிபான்கள் மீது சம்பந்தப்பட்ட பெண்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். 

அதே நேரத்தில் தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஒருவர் பெண்கள் வேலைக்கு செல்லவும், படிக்கவும் தங்கள் அமைப்பு அனுமதிப்பதாக தெரிவித்துள்ளார். கூடுதலாக ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு பங்கு அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக மற்றொருவர் தெரிவித்துள்ளார். 

மறுபக்கம் காபூல் நகருக்கு வெளியில் உள்ள பிற பகுதிகளை சார்ந்த பெண்கள், ஆண் துணையுடன் தான் வெளியில் வர வேண்டும் என தலிபான்கள் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பெண்கள் பல்கலைக்கழகம் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மகளிர் சுகாதார நிலையங்கள் மற்றும் பெண் பிள்ளைகள் படிக்கின்ற பள்ளிகளையும் தலிபான்கள் கதவடைத்து வைத்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. 

தலிபான்கள் இப்போது ஷரியத்தை அணுகும் விதம் மாறுபட்டிருக்கலாம் என தனக்கு சிறிய அளவில் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார் அந்நாட்டின் முன்னாள் மகளிர் விவகாரங்கள் துறை துணை அமைச்சர் ஹோஸ்னா ஜலீல். 

தகவல் உறுதுணை : தி நியூயார்க் டைம்ஸ் 


Advertisement

Advertisement
[X] Close