Published : 19,Aug 2021 07:35 PM

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக குறையும் தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 1,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் 1,797 என்றிருந்த நிலையில், இன்று பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையிலும் தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை 193 என குறைந்துள்ளது. தொற்று உறுதியானவர்களில், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 90 பேர் இருப்பதாக மருத்துவத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணிநேரத்தில் அரசு மருத்துவமனையில் 20 பேரும்; தனியார் மருத்துவமனையில் 9 பேரும் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கோவையில் 5 பேரும், சென்னையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இவர்களன்றி திருவாரூர், திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர்; விருதுநகர், வேலூர், சிவகங்கை, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கடலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர். 23 மாவட்டங்களில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்புக்கூட இல்லை என்ற நிலையும் உருவாகியுள்ளது. இதன்மூலம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,639 என்றாக உயர்ந்துள்ளது. 

image

இதேபோல கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1,892 பேர் குணமடைந்த காரணத்தால் தற்போது கொரோனா சிகிச்சையில் 19,864 பேர் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 25,41,432 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்