[X] Close

தலிபான்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கம் - ஃபேஸ்புக் அறிவிப்பு

உலகம்

Facebook-has-announced-that-it-will-also-disable-the-Taliban-WhatsApp-accounts
தலிபான்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் அவர்களின் வாட்ஸ்-அப் கணக்குகளும் முடக்குவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு விரைவில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். தலிபான்களுக்கு பயந்து அங்கிருந்து வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல ஏராளமானோர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதற்கிடையில் தலிபான்களின் ஃபேஸ்புக் கணக்குகளை முடக்குவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை பேஸ்புக் மேற்கொண்டுள்ளது. மேலும், தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுவோரின் ஃபேஸ்புக் கணக்குகளும், பதிவுகளும் நீக்கும் பணியை துவங்கி இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில், தலிபான்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வாட்ஸ்-அப் கணக்குகளும் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. மெசஞ்சர் செயலியான வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
[X] Close