இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் அரை சதமடித்து விளையாடி வருகிறார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் 129 ரன்களும், ரோகித் சர்மா 83 ரன்களும் எடுத்தனர். கேப்டன் விராட் கோலி 42 ரன்களும், ஜடேஜா 40 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 2 ஆம் நாளான நேற்று இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. இதில் ரோரி பர்ன்ஸ் 49 ரன்களுக்கும், டோம் சிப்ளே 11 ரன்களுக்கும், ஹசீப் ஹமீத் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் 3 ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கேப்டன் ஜோ ரூட்டும் - ஜானி பேர்ஸ்டோவும் தங்களுடைய இன்னிங்சை தொடர்ந்தனர்.
இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் அரை சதம் விளாசினார். மேலும் பேர்ஸ்டோ - ஜோ ரூட் கூட்டணி 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர். இப்போது வரை இங்கிலாந்து அணி இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 191 ரன்கள் பின் தங்கி விளையாடி வருகிறது. இப்போது வரை 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து. ஜோ ரூட் 76 ரன்களுடனும், பேர்ஸ்டோ 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?