Published : 13,Aug 2021 03:36 PM
திருவண்ணாமலை: வேன் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே வேன் மீது லாரி மோதியதில் வேனில் பயணித்த ஒரு குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனியன்தாங்கல் பகுதியில் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.