Published : 10,Aug 2021 09:44 PM
விதிமீறல் புகார் - மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தற்காலிக இடைநீக்கம்

விதிமீறல் புகாரில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மல்யுத்த சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை தற்காலிகமான ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் விதிமுறைகளை பின்பற்றாத புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை அவர் மீது எடுக்கப்பட்டுள்ளது. 53 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றிருந்தார். காலிறுதியில் அவர் தோல்வியுற்று வெளியேறி இருந்தார்.