Published : 08,Aug 2017 04:47 PM

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்

Justice-Dipak-Misra-appointed-as-next-Chief-Justice-of-India--Law-Ministry

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய தலைமை நீதிபதி கெஹர் வரும் 27 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நிய‌மிக்கப்பட்டுள்ளார். பாட்னா, டெல்லி உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ள தீபக் மிஸ்ரா, பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். நாட்டை உ‌லுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு, மும்பை தாக்குதல் வழக்கு உள்ளிட்டவற்றில் தீபக் மிஸ்ராவின் தீர்ப்புகள் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.‌

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்