[X] Close

"எனது பயோபிக்கில் நீரஜ் சோப்ரா நடிக்கணும்!" - அக்‌ஷய் குமாரின் 'வைரல்' ஆசை

சினிமா

Actor-Akshay-Kumar-wants-Neeraj-Chopra-to-play-him-in-a-biopic

ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ரா குறித்து பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ள பதிலும், அவரின் மீம்ஸ் ஒன்றும் வைரலாக பரவி வருகிறது.


Advertisement

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் ஹீரோவாக மாறியிருக்கிறார் நீரஜ் சோப்ரா. இந்தியா முழுவதும் தற்போது பிரபலமாகி இருக்கும் நீரஜ் சோப்ரா, சினிமா உலகிலும் கவனிக்கப்படுகிறார். இதனால் இவரின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக் திரைப்படமாக எடுப்பது தொடர்பான பேச்சுக்கள் எழுந்துள்ளன.

image


Advertisement

பயோபிக் குறித்து பேசியுள்ள நீரஜ், "எனது பயோபிக் படத்தை எடுப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன். நான் இன்னும் விளையாடுகிறேன். விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என நினைக்கிறேன். எனது வாழ்க்கைப் பயணத்தில் இன்னும் அதிக கதைகளை சேர்க்க வேண்டும் என விரும்புகிறேன். எனவே, இப்போதைக்கு நான் எனது விளையாட்டில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, எனது பயோபிக்கை எடுக்கவே விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக சில ஆண்டுகள் முன்பு 'தி க்வின்ட்' தளத்துக்கு பேசியிருந்த நீரஜ் சோப்ரா, "எனது பயோபிக் திரைப்படம் எடுக்கப்பட்டால் அதில் அக்‌ஷய் குமார் அல்லது ரன்தீப் ஹூடா நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார். இந்த விருப்பத்துக்கு அக்‌ஷய் குமார் பதிலளித்துள்ளார். அதில், ``நீரஜ் சோப்ரா அழகானவர். நல்ல தோற்றம் கொண்டவர். என்றாவது ஒருநாள் எனது வாழ்க்கையைப் பற்றி ஒரு திரைப்படம் எடுத்தால், அதில் நீரஜ் சோப்ரா நடிக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார் அக்‌ஷய்.

image


Advertisement

இதற்கிடையே, நீரஜ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு, மீம்ஸ் கிரியேட்டர்கள், அக்‌ஷய் குமார் கையில் ஒரு குச்சியுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்து `நீரஜ் பயோபிக்கில் நடிக்க அக்சய் ஏற்கெனவே பயிற்சியில் ஈடுபட தொடங்கிவிட்டார்" என்று வைரலாக்கி வருகின்றனர். இந்த மீம்ஸ்க்கும் அக்‌ஷய் ரெஸ்பான்ஸ் செய்துள்ளார். ``நானும் அந்த மீம்ஸை பார்த்தேன். அது வேடிக்கையாக இருந்தது. அந்தப் புகைப்படம், எனது முதல் படம் சவுகாந்த் படத்தின்போது எடுக்கப்பட்டது" என்று ஜாலியாக பேசியிருந்தார்.

image

கடந்த காலத்தில், `பாட்மேன்', `ரஸ்டம்', `கேசரி' போன்ற பயோபிக் திரைப்படங்களில் நடித்துள்ள அக்‌ஷய் குமாரின் அடுத்த திரைப்படமாக 'பெல்பாட்டம்' வெளியாக இருக்கிறது. மேலும், அடுத்தடுத்து ப்ரித்விராஜ், சூரியவன்ஷி, பச்சன் பாண்டே, ரக்‌ஷா பந்தன், ராம் சேது மற்றும் அத்ராங்கி ரே போன்ற படங்கள் அக்‌ஷய் நடிப்பில் வெளியாக இருக்கின்றன.


Advertisement

Advertisement
[X] Close