[X] Close

“ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்துக்கொண்டனர்” - திமுக நிர்வாகி மீது வழக்கு

குற்றம்

Cash-embezzlement-case-against-a-DMK-executive

காஞ்சிபுரம் அருகே அனுமதி பெறாமல் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த புகாரில் திமுக நிர்வாகி மீது பண அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம், ராயன்குட்டை பள்ளத்தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு, வயது 49. இவர், டிராவல்ஸ் நிறுவனமொன்று நடத்தி வருகிறார். இவர், பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “சீனிவாசனிடம், கடந்த 2019ல், கோடி ரூபாயில் இரண்டு சீட்டும், 50லட்சம், 25 லட்சம், 10லட்சம், 3 லட்சம் ரூபாய் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு சீட்டு கட்டி வந்தேன். அதற்கான சுயூரிட்டியாக களியனுாரில் உள்ள ஐந்து சொத்துக்கள், பாக பிரிவினை பத்திரம் என, 2 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை, கார்த்திக் என்பவருக்கு பவர் பத்திரம் எழுதி கொடுத்தேன். அதன் பின், 1 கோடி ரூபாய் மதிப்புடைய சீட்டை எடுத்தேன். இந்நிலையில், நான் கட்டி வந்த மற்ற சீட்டுகளை திடீரென ரத்து செய்துவிட்டனர். ரத்து செய்யப்பட்ட சீட்டுகளில் கட்டிய தொகையான 38.50 லட்சம் ரூபாயை தரவில்லை. தவிர, சுயூரிட்டிக்காக நான் எழுதி கொடுத்த 2 கோடி ரூபாய் சொத்துகளை, கார்த்திக், சரவணபெருமாளுக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். என்னுடைய 38.50 லட்சம் ரூபாய், 2 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை அபகரித்து கொண்டனர். திருப்பி கேட்டால் மிரட்டுகின்றனர்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

image


Advertisement

இந்த புகார் மீது விசாரணை நடத்திய காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் எஸ்கேபி.சீனிவாசன் உள்ளிட்ட நான்கு பேர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். காஞ்சிபுரத்தில் மிக பெரிய அளவில் வட்டிக்குப் பணம் கொடுத்தல், சீட்டுகள் போன்றவற்றை நடத்தி வரும் இந்த எஸ்கேபி சீனிவாசன், தி.மு.க.,வின் தெற்கு மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கோடி ரூபாய்க்கு மேல் பைனான்ஸ் மற்றும் சீட்டு நடத்தும் இந்த சீட்டு கம்பெனி, ஒரு பதிவு செய்யப்படாத கம்பெனிதான். இத்தகவலானது, தகவல் அறியும் உரிமை ஆணையத்திடமிருந்து, தெரியவந்துள்ளது. இது வெளிச்சத்துக்கு வந்ததன் மூலம், சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு பெறாத பைனான்ஸ் கம்பெனியை நடத்தி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

image


Advertisement


Advertisement

Advertisement
[X] Close