Published : 04,Aug 2021 02:26 PM

சென்னை: ‘பீஸ்ட்’ படப்பிடிப்பில் இணைந்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ

Malayalam-actor-Shine-Tom-Chacko-joins-vijay-Beast-shoot-in-Chennai

சென்னையில் நடந்துவரும் விஜய்யின் ’பீஸ்ட்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. அதனையடுத்து, சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். இந்த நிலையில், தற்போது சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். 

image

இப்படப்பிடிப்பில், கலந்துகொள்ள மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சென்னை வந்துள்ளார். மலையாளத்தில், உறுதுணை கதாபாத்திரங்களில் நடித்துவரும் ஷைன் டாம் சாக்கோ ஏற்கனவே, தமிழில் ஹரி இயக்கத்தில் தனுஷின் ‘வேங்கை’ படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்