Published : 08,Aug 2017 05:03 AM
சென்ட்ரலில் பணம் பறிப்பு: 3 காவலர்கள் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டதாக தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்ட்ரல் ரயில் நிலைய காத்திருப்பு அறையில் தன்னிடம் இருந்த பணத்தை பறித்ததாக வட மாநில பயணி ஒருவர் அளித்த புகாரில் ரயில்வே ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட காவலர்கள் ராமலிங்கம், இருதயராஜ், அருள்தாஸ் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.