[X] Close

நீதிபதிகளுக்கான தேசிய அளவிலான தேர்வு - 9 உயர் நீதிமன்றங்கள் எதிர்ப்பு

National-Examination-for-Judges---9-High-Courts-Opposed

கீழமை நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்ய தேசிய அளவிலான தேர்வு நடத்த 9 மாநில உயர்நீதிமன்றங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

கீழமை நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்ய தேசிய அளவிலான தேர்வு நடத்த அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, டெல்லி, குஜராத், கர்நாடகா, பீகார் உள்ளிட்ட 9 மாநில உயர்நீதிமன்றங்கள் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே வேளையில் கேரளா உள்ளிட்ட 8 மாநில உயர்நீதிமன்றங்கள் தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. கீழமை நீதிமன்றங்கள் மீதான கட்டுப்பாடு தங்களிடமே இருக்க வேண்டும் என்ற எண்ணமே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.  


 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close