[X] Close

தூத்துக்குடி: ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; இலங்கைக்கு கடத்த முயன்றது கண்டுபிடிப்பு

குற்றம்

1-crore-worth-of-cannabis-seized

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


Advertisement

விளாத்திக்குளம் அருகே உள்ள கீழ வைப்பார் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த 3 பேர், ரோந்து சென்ற காவலர்களைக் கண்டு தப்பியோடினர். அவர்கள் வந்த காரை சந்தேகத்தின்பேரில் சோதனையிட்டபோது, அதில் 4 மூட்டைகளில் 80 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றின் சந்தை மதிப்பு 1 கோடி ரூபாய் என தெரிவித்துள்ள காவல்துறையினர், படகு மூலமாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததாகவும் கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய மூவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close