[X] Close

மாட்டுச்சாணத்தில் இருந்து மின்சாரம் தயாரிப்பு - அசத்தும் திருவள்ளூர் கிராமம்

வீடியோ ஸ்டோரி

சென்னை பூந்தமல்லியை அடுத்த வரதராஜபுரம் கிராமத்தில், மாட்டுச்சாணத்தில் இருந்து உயிரிவாயு எடுத்து அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. நீர்நிலைகள் மாசடைவதை தடுக்க எடுக்கப்பட்ட முயற்சி, இப்போது 50 தெரு விளக்குகளுக்கு மின்சாரம் கொடுக்கும் அளவுக்கு மாறியுள்ளது.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது வரதராஜபுரம் கிராமம். கால்நடை வளர்ப்பை பிரதானமாக கொண்ட இந்த கிராமத்தில், கால்நடை கழிவுகளால் மண்ணாங்கட்டி குட்டை மாசடைந்தது. இதை சீர்படுத்த 2018 ஆம் ஆண்டு, ஆட்சியர் முயற்சியில், ஊர்மக்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இணைந்து சாணம் மூலம் எரிவாயு தயாரிக்கும் மின்நிலையம் அமைக்கும் பணிகளில் தனியார் நிறுவனத்துடன் கரம் கோத்தனர். இதன்படி நாள் தோறும் சராசரியாக 1150 கிலோ மாட்டு சாணம் கால்நடை விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு அதன் மூலம் 200 யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது 50 தெரு விளக்குகளுக்கு இந்த மின் நிலையத்தின் மூலமே மின்சாரம் தரப்படுகிறது. இதற்காக இரவில் 12 மணி நேரம் இந்த பசுமை மின் ஆற்றல் உற்பத்தி நிலையம் செயல்படுகிறது.


Advertisement

மின்தேக்கிகளை வாங்குவதற்கு பஞ்சாயத்து மூலம் நிதி ஒதுக்கினால் கிராமத்தின் மின் தேவையின் பாதியை இந்த மின்நிலையத்தின் மூலம் போக்க முடியும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தங்கள் கிராமம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் Electric charging station அமைக்கும் திட்டமும் உள்ளதாக பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்


Advertisement

Advertisement
[X] Close