[X] Close

பிரதமர் மோடியை நாளை காலை சந்திக்க ஓ.பி.எஸ், இ.பி.எஸ் திட்டம்

தமிழ்நாடு

Edappadi-K-Palaniswami-and-O-Panneerselvam-will-meet-Prime-Minister-Narendra-Modi-tomorrow-morning

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருக்கும் நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று இரவு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.


Advertisement

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக இன்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக அவர் சென்றுள்ளார். இந்நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கோவை விமான நிலையத்தில் இருந்து இன்று இரவு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து, பிரதமர் நரேந்திர மோடியை நாளை காலை எடப்பாடி பழனிசாமியும் சந்திக்கவுள்ளார். அப்போது மேகதாது விவகாரம், தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை, உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிப்பார்கள் எனத் தெரிகிறது.


Advertisement

அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் அளிக்காதது பற்றி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் பேசுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement
[X] Close