[X] Close

புதிய சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்; வாகன ஓட்டிகள் சாலை மறியல்

தமிழ்நாடு

Motorists-staged-a-road-blockade-at-the-newly-opened-toll-plaza-near-Perambalur-demanding-higher-fares
பெரம்பலூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடியியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி வாகன ஓட்டிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
 
பெரம்பலூர்-அரியலூர் சாலையில் பேரளி அருகே புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக செயல்படாமல் இருந்த சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் சோதணை ஓட்டம் நடந்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று முதல் சுங்கச்சாவடி திறக்கப்பட்டு அதை கடந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கார், வேன், பேருந்து, லாரி, கனரக வாகனம் என அனைத்திற்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக்கூறி அங்கு பணிபுரிபவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூருக்கு மிக அருகில் இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் வாகனங்களுக்கு சலுகை ஏதும் இல்லாமலும், அதே சமயத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் கூறி வாகன ஓட்டிகள் சாலைமறியல் செய்தனர். அதேபோல் பிற வாகனங்களுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி சாலை மறியல் நடைபெற்றது. இதனால், சுங்கச்சாவடியின் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து காத்திருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement
[X] Close