[X] Close

ஒலிம்பிக்: விம்பிள்டன் சாம்பியன் ஆஷ்லே பார்ட்டி அதிர்ச்சி தோல்வி

விளையாட்டு,ஒலிம்பிக்

World-No-1-Ashleigh-Barty-Crashes-Out-In-First-Round-of-Tokyo-Olympics

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் சாம்பியனான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி அதிர்ச்சி தோல்வியடைந்தார்.


Advertisement

டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி ஸ்பெயின் நாட்டின் சாரா சொர்ரிபெஸ் டோர்மோவை எதிர்கொண்டார்.

image


Advertisement

ஆஷ்லே பார்ட்டி எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4-6, 6-3 என அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.


Advertisement

Advertisement
[X] Close