Published : 20,Jul 2021 12:29 PM
குஷ்புவின் ட்விட்டர் கணக்கை முடக்கிய மர்மநபர்கள்

பாஜகவைச் சேர்ந்த குஷ்புவின் ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கி அனைத்து பதிவுகளையும் அழித்துள்ளனர்.
பாஜகவை சேர்ந்த குஷ்புவின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் குஷ்புவின் ட்விட்டர் ஐடியை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக தெரிகிறது. அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியிருந்த அனைத்து ட்வீட்களும் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது ஐடி பெயர் 'briann' என மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ஹேக் செய்யப்பட்ட நடிகை குஷ்புவின் ட்விட்டர் ஐடியை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
