[X] Close

இந்திரா காந்தியை கல்லாலும் சொல்லாலும் தாக்கியது நினைவிருக்கிறதா? - ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

Tamilisai-questioned-MK-Stalin

ராகுல் காந்தியின் பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியை திமுகவினர் கல்லாலும் சொல்லாலும் தாக்கியது ஸ்டாலினுக்கு நினைவிருக்கிறதா என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

ராகுல்காந்தியின் கார் மீது கல் எறிந்தவர்களை கண்டித்து குஜராத் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தபின்னர், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பதாக தமிழிசை விமர்சித்துள்ளார். அதேநேரத்தில் ராகுல்காந்தியின் பாட்டியான இந்திரா காந்தியை மதுரையில் திமுகவினர் கல்லால் தாக்கி பின்னர் சொல்லால் தாக்கியதாகவும் அது ஸ்டாலினுக்கு நினைவிருக்கிறதா எனவும் தமிழிசை வினவியுள்ளார். திமுகவினரின் செயலை மறந்து விட்டு தற்போது ஸ்டாலின் பேசுவது நகைப்புக்குரியது என்று தெரிவித்த தமிழிசை, அரசியல் நாகரீகத்தில் திமுகவைவிட பாஜக சிறந்து விளங்குவதாகவும் கூறியுள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close