[X] Close

திருவண்ணாமலை: மணல் கடத்தலில்  தேடப்பட்டவர் சடலமாக மீட்பு

தமிழ்நாடு

Thiruvannamalai--body-of-a-person-wanted-in-sand-smuggling-has-been-recovered

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் மணல் கடத்தலில்  தேடப்பட்ட முரளி என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.


Advertisement

போளூர் அருகே செய்யாற்று படுகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக முரளி என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இவரை நேற்று முன்தினம் போலீசார் தேடிவந்ததாகவும், தப்பித்து ஓடிய முரளியை போலீசார் துரத்தி ஓடியதாகவும் உறவினர்கள் புகார் அளித்தனர். காவல்துறையினரால் துரத்தி செல்லப்பட்டதாக கூறப்படும் முரளி, நேற்று இரவில்  பொம்பலூர் ஆற்றுப்படுகையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனால், முரளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே இவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close