[X] Close

20 வருடத்துக்குப் பிறகு பாக்.கில் இந்து அமைச்சர்!

First-Hindu-in-Pak-govt-in-over-two-decades

இருபது வருடத்துக்கு பிறகு இந்து அமைச்சர் மதத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராகி உள்ளார். 

பாகிஸ்தானில் பனாமா கேட் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவியிழந்தார். அதை தொடர்ந்து அவரது அமைச்சரவை கலைக்கப்பட்டது. புதிய பிரதமராக ஷாகித் ககான் அப்பாசி பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் இந்து மதத்தை சேர்ந்த தர்‌ஷன் லால் பதவியேற்றுள்ளார். 65 வயதான இவருக்கு மாகாணங்கள் ஒருங்கிணைப்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக இந்து மதத்தை சேர்ந்த யாரும் அமைச்சர் பதவி வகிக்கவில்லை. 

லால், ஒரு மருத்துவர். சிந்து மாகாணத்தின் கோட்கி மாவடத்தில் உள்ளல் உள்ள மிர்பூரில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் சார்பில் போட்டியிட்டு 2-வது முறையாக வெற்றி பெற்றார். இது சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close