[X] Close

"தலைமையேற்று கட்சியை வழிநடத்த வயது முக்கியமில்லை" - அண்ணாமலை

தமிழ்நாடு

Age-is-not-a-concern-to-head-the-party-says-BJP-future-Tamil-Nadu-leader-Annamalai

தலைமையேற்று கட்சியை வழி நடத்துவதற்கு வயது ஒரு முக்கியமான விஷயம் இல்லை என, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்க இருக்கும் அண்ணாமலை கூறினார்.


Advertisement

வருகிற 16-ஆம் தேதி சென்னையில் பொறுப்பேற்பதற்காக, கோவையில் இருந்து ஊர்வலமாகக் கிளம்பியவர், செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். மேலும், பாஜக-வை பொறுத்தவரை அனுபவமுள்ள மூத்த உறுப்பினர்களும், இளைஞர்களும் நிறைந்த கட்சியாக இருப்பதால், அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வலுப்படுத்தும் வாய்ப்பாகவே இந்த தலைவர் பொறுப்பை தான் நினைப்பதாகவும் அவர் கூறினார்.

கோவையில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை புறப்பட்டிருக்கும் அண்ணாமலைக்கு, வழிநெடுகிலும் அந்தந்த மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close