Published : 10,Jul 2021 08:03 PM

தமிழ்நாட்டில் இன்று 2,913 பேருக்கு கொரோனா: 49 பேர் பலி

Corona-infection-2-913-people-in-Tamil-Nadu-today--49-killed

தமிழ்நாட்டில் இன்று 2,913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 49 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 2,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25,16,011 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று 3,321 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 24,49,873 ஆக உள்ளது. தற்போது தமிழகத்தில் 32,767 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இன்று 49 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 33,371 ஆக அதிகரித்திருக்கிறது.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்