[X] Close

நான் ஆணையிட்டால், எம்.ஜி.ஆர் கதையா?

Rana-Daggubati-says-Naan-aanaiyittal-is-inspired-by-MGR---s-life

'பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராணா நடித்துள்ள படம் ‘நான் ஆணையிட்டால்’.  அரசியல் படமான இதில் காஜல் அகர்வால், கேத்ரின் தெரசா, ஜெகன், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். தேஜா இயக்கியுள்ள இந்தப் படம், வரும் 11-ம் தேதி வெளியாகிறது.

படம் பற்றி ராணா கூறும்போது, ’லீடர் படத்துக்கு பிறகு மீண்டும் அரசியல் கதையை கொண்ட இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது. ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் எனது தாத்தா (பிரபல தயாரிப்பாளர் ராமநாயுடு) இந்தப் படத்தை பார்க்க முடியாததுதான். இருந்தாலும் மேலிருந்து அவர் என்னை ஆசிர்வதிப்பார் என்று நம்புகிறேன். இது அரசியல் கதை என்றாலும் கற்பனை கதைதான். இது எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையா என்று கேட்கிறார்கள். இயக்குனர் தேஜா, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. ஆனால், எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றுக் கதை அல்ல’ என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close