[X] Close

தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு: அபராதம் விதித்த அதிகாரிகள்

Power-theft-for-dhanush-caravan

நடிகர் தனுஷ் பயன்படுத்திய கேரவனுக்கு மின்சாரம் திருடப்பட்ட விவகாரத்தில், கேரவன் பொறுப்பாளருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் முத்துரெங்கபுரத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ள தனுஷ் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், அவரது குடும்பத்தினர் ஓய்வு எடுப்பதற்காக வரவழைக்கப்பட்ட சொகுசு வாகனத்திற்கு, அரசின் மின்சாரப் பெட்டியில் இருந்து மின்சாரம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற மின்வாரிய அதிகாரிகள், கேரவனுக்கு செல்லும் மின்சார இணைப்பை துண்டித்தனர். இது தொடர்பாக ஆய்வு நடத்திய அவர்கள், கேரவன் பொறுப்பாளர் வீரப்பன் என்பவருக்கு 15 ஆயிரத்து 7‌61 ரூபாயை அபராதமாகவும் விதித்தனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close