Published : 01,Jul 2021 03:05 PM
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கெட்-அப்பில் அரவிந்த்சாமி, கங்கனா: ட்ரெண்டாகும் புதிய புகைப்படங்கள்

கங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’ படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தை ஏ.எல் விஜய் இயக்கி முடித்துள்ளார். நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்திருக்கிறார்கள்.
தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23 ஆம் தேதி ’தலைவி’ வெளியாகும் என்று அறிவித்த படக்குழு, பின்பு கொரோனாவால் படத்தை இப்போதைக்கு வெளியிட முடியாது என்று விளக்கம் கொடுத்தது. இப்படத்தின் ’மழை மழை’ என்ற முதல் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. சமீபத்தில் இப்படத்தின் தமிழ் மொழி படத்திற்கு மட்டும் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருந்தது.
இந்த நிலையில், நடிகை கங்கனா ரனாவத், அரவிந்த் சாமியின் ’தலைவி’ பட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் கெட்டப்பில் கங்கனா, அரவிந்த் சாமியின் டூயட் படங்களும் சட்டமன்றக் காட்சிப் படங்களும், இந்திரா காந்தி கெட்டப்பில் இருப்பவருடன் கங்கனா இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளன.