[X] Close

விருதுநகர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் போக்சோவில் கைது

குற்றம்

Virudhunagar-A-boy-has-been-arrested-in-Pokso-for-sexually-abusing-a-girl

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


Advertisement

அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனை சென்று பரிசோதித்தபோது அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


Advertisement

புகாரின் அடிப்படையில் சிறுவனை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து, மதுரையில் உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு கொண்டு சென்றனர்.


Advertisement

Advertisement
[X] Close