Published : 29,Jun 2021 05:19 PM

நீட் விவகாரத்தில், திமுக அரசு மாணவர்களை குழப்பத்துக்கு உள்ளாக்குகிறது: நயினார் நாகேந்திரன்

BJP-Nainar-Nagendran-speaks-about-DMK-stand-on-NEET

பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று அளித்த பேட்டியில், 'ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை, சட்டப்பேரவையில் கூறிதான் புரிய வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை' என்றும், 'ஒன்றிய அரசு என்ற வார்த்தையின் பொருளில்தான் தவறுள்ளது' என்றும் கூறினார். 

மெல்லிசை மேடை இசை கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கியபின், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "மெல்லிசை மேடை இசை கலைஞர்களுக்கு நலவாரியம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். சட்டமன்றத்தில் அதுகுறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைப்பேன்.

image

இதுவரை மத்திய அரசு என்று சொல்லியவர்கள், தற்போது ஒன்றிய அரசு என்று சொல்கின்றனர். இச்சொல்லில் குற்றமில்லை, அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதத்திலும், பொருளிலும்தான் குற்றம் உள்ளது" என்று கூறினார்.

மேலும் பேசியபோது, "நீட் தேர்வு விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடவில்லை. இவ்விவகாரத்தில் திமுக அரசுதான், மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. நீட் தேர்வு விவகாரம் தற்போதைக்கு முடியக்கூடிய விவகாரம் இல்லை. நீட் தேர்வு சம்பந்தப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீட் தேர்விற்கு தற்போது விலக்கு கிடைக்காது. இது தெரிந்தும் திமுக அரசு முரண்பட்ட கருத்துகளை சொல்லி வருவது மாணவர்களை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும்" என்று கூறினார் அவர்.

கட்சி வாய்ப்பளித்தால் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டி!' - நயினார் நாகேந்திரன் | I am ready to contest in parliamentary by election, says Nainar Nagendran

மேலும் நயினார் நாகேந்திரன், "ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை சட்டமன்றத்தில் சொல்லித்தான், அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை. ஜெய்ஹிந்த் என்பது நமது நாடு, நமது தேசம் அதன் மீதுள்ள பற்றை வெளிப்படுத்துகிறது. ஜெய்ஹிந்த் என்றால் 'தாய் நாடு வெற்றி பெற வேண்டும்' என்பது பொருள். தனது தாய் நாடு வெற்றி பெற வேண்டும் என்று சொல்வதில் அவருக்கு தயக்கம் என்று சொன்னால், அவர்கள் எந்த நாட்டில் சென்று வாழப் போகிறார்கள்?" என்று கேள்வியும் எழுப்பினார்.

- நாகராஜன் | படங்கள்: நாராயணமூர்த்தி.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்