Published : 27,Jun 2021 09:48 PM
"வெளிவரவுள்ளது ‘பிடிஆர்’ பட்ஜெட் இல்லை; முதலமைச்சர் பட்ஜெட் தான்": பழனிவேல் தியாகராஜன்

"வெளிவரவுள்ள தமிழ்நாடு பட்ஜெட் பிடிஆர் பட்ஜெட் என்ற கூற்று தவறு, எல்லாம் முதலமைச்சர் பட்ஜெட்தான்" என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்
இது தொடர்பாக நிதியமைச்சர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “வெளிவரவுள்ள தமிழ்நாடு பட்ஜெட் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு பார்வையுடன் உருவாகிறது. எனவே PTR பட்ஜெட் என்ற கூற்று தவறு, எல்லாம் முதலமைச்சர் பட்ஜெட்தான். ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக IAS அதிகாரிகள் எழுதி தரும் பட்ஜெட்டுக்கு மாற்றாக ஒரு அரசியல்வாதி எழுதியதாக இருக்கும்” என தெரிவித்திருக்கிறார்.
வெளிவரவுள்ள தமிழ்நாடு பட்ஜெட் முதல்வர் @MKStalin அவர்களின் தொலைநோக்கு பார்வையுடன் உருவாகிறது. எனவே PTR பட்ஜெட் என்ற கூற்று தவறு. எல்லாம் முதலமைச்சர் பட்ஜெட்தான். ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக IAS அதிகாரிகள் எழுதி தரும் பட்ஜெட்டுக்கு மாற்றாக ஒரு அரசியல்வாதி எழுதியதாக இருக்கும் pic.twitter.com/L6WdVrpe2H
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) June 27, 2021