[X] Close

மருத்துவர் ஆலோசனையின்றி குழந்தைகளுக்கு CT ஸ்கேன், கோவிட் டெஸ்ட் கூடாது: டாக்டர் நேமிநாதன்

கொரோனா வைரஸ்,ஹெல்த்

Covid-and-Child-care--Explained

கோவிட் பரவல் தடுப்புக்கு சரியான நடத்தை விதிமுறை, தடுப்பூசி மற்றும் இதர நடவடிக்கைகளால் மூன்றாவது அலையை நம்மால் வெல்லமுடியும் என்று கோவிட் மற்றும் குழந்தை நலன் தொடர்பாக சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இணையவழிக் கருத்தரங்கில் டாக்டர் நேமிநாதன் பேசினார்.


Advertisement

"மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு சிடி ஸ்கேன் மற்றும் கோவிட் பரிசோதனையை மேற்கொள்வது அபாயகரமான விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும்” என்று, 'கோவிட் மற்றும் குழந்தை நலன்' என்ற தலைப்பில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகமும், பத்திரிகை தகவல் அலுவலகமும் ஏற்பாடு செய்திருந்த இணையவழி கருத்தரங்கில் கோயம்புத்தூர் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் மேலாண் இயக்குநர் டாக்டர் நேமிநாதன் தெரிவித்தார்.

image


Advertisement

இந்திய குழந்தை மருத்துவ சங்கத்தின் தேசிய நிர்வாகக் குழுவின் முன்னாள் உறுப்பினரும், மாநில துணைத் தலைவருமான டாக்டர் நேமிநாதன், உலக சுகாதார அமைப்பின் சென்டினல் மருத்துவராவார்.

இந்த நிகழ்வில் டாக்டர் நேமிநாதன் பேசும்போது, "ஒவ்வொரு குழந்தையின் முதல் மருத்துவர், தாய். குழந்தைகளின் அறிகுறிகளைக் கண்காணித்து உரிய காலத்தில் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், முறையான சுகாதாரத்தைக் கடைப்பிடித்து தாய், தனது குழந்தைக்கு தாய்ப்பாலைத் தொடர்ந்து கொடுக்கலாம்.

எதிர்வரும் அலை, குழந்தைகளை மையமாகக் கொண்டு தாக்காது. 95% குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதிக்கத் தேவை இருக்காது. பெரியவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படாது.


Advertisement

கோவிட் தடுப்பில் சரியான நடத்தை விதிமுறை, தடுப்பூசி, தாய்ப்பால் புகட்டுதல், இதர தடுப்பூசிகளை முறையாக போட்டுக் கொள்ளுதல், கிராமங்களில் ஒருங்கிணைந்த மருத்துவ சேவையை துவக்குவது முதலியவை மூன்றாவது அலையை வெல்வதற்கு உதவிகரமாக இருக்கும்.

நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் ஆற்றல் குழந்தைகளிடையே இயற்கையாகவே அதிகம் காணப்படும். 12-18 வயது வரையிலான பிரிவினருக்கு தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு 2022-ஆம் ஆண்டு வாக்கில் தெளிக்கும் வகையிலான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.


Advertisement

Advertisement
[X] Close