[X] Close

யூரோ கோப்பை: நாக் அவுட் சுற்று இன்று தொடக்கம் - பலப்பரீட்சை நடத்தும் 16 அணிகள்

விளையாட்டு

Euro-Cup-Knockout-round-starts-today-16-teams-competing

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று முதல் நாக் அவுட் சுற்று போட்டிகள் தொடங்கவுள்ளன.


Advertisement

பரபரப்புக்கு பஞ்சமில்லாத யூரோ கோப்பை கால்பந்து தொடரில் 24 அணிகள் கலந்து கொண்ட லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில், இந்த லீக் சுற்றுப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற 2 அணிகள் வீதம் 12 அணிகள். அவை, A பிரிவில் இருந்து இத்தாலி, வேல்ஸ் அணிகளும். B பிரிவில் இருந்து பெல்ஜியல், டென்மார்க் அணிகளும். C பிரிவில் இருந்து நெதர்லாந்து, ஆஸ்டிரியா அணிகளும், D பிரிவில் இருந்து இங்கிலாந்து, குரோசியா அணிகளும். E பிரிவில் இருந்து ஸ்வீடன், ஸ்பெயின் அணிகளும், F பிரிவில் இருந்து பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அணிகளும் (pre quarter finals) காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகளுக்குள் நுழைந்துள்ளன.

image


Advertisement

அதேபோல லீக் சுற்றுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நான்கு அணிகளும் அவை, ஏ பிரிவில் இருந்து சுவிட்சர்லாந்து அணியும், சி பிரிவில் இருந்து உக்ரைன் அணியும், டி பிரிவில் இருந்து செக் குடியரசு அணியும் எப் பிரிவில் இருந்து போர்ச்சுகல் அணியும் அடுத்த சுற்றுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளன. இதையடுத்து 12 + 4 என மொத்தம் 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கின்றன.

image

16 அணிகள் கலந்து கொள்ளும் நாக் அவுட் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. இன்றிரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் வேல்ஸ் மற்றும் டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த இத்தாலி அணியை எதிர்த்து ஆஸ்திரியா விளையாடவுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close