[X] Close

“எனது ட்விட்டர் கணக்கும் இதே போல முடக்கப்பட்டது” - காங்கிரஸ் எம்.பி சசி தரூர்

இந்தியா,டெக்னாலஜி

Am-also-denied-to-access-my-Twitter-Page-says-Congress-MP-Sashi-Tharoor-following-Union-Minister-Ravi-Shankar-Prasad

மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. ஒரு மணி நேர முடக்கத்திற்கு பிறகு மீண்டும் வழக்கம் போல அவரது பக்கம் இயங்கியுள்ளது. இந்நிலையில், தனக்கும் இதே போல ஒருமுறை நடந்துள்ளதாக ட்விட்டர் உடனான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர். 


Advertisement

“அமெரிக்க டிஜிட்டல் பதிப்புரிமை சட்டத்தை மீறியதாக சொல்லி எனது கணக்கும் முடக்கப்பட்டது. இது தொடர்பாக பாராளுமன்ற குழுவுக்கு விளக்கம் தரக்கோரி ட்விட்டரிடம் கோரப்படும். எனது கணக்கு, அமைச்சரின் கணக்கு மற்றும் இந்தியாவில் ட்விட்டர் எப்படி செயல்படுகிறது என்ற அடிப்படையில் இந்த விளக்கம் கேட்கப்படும்” என சசி தரூர் தெரிவித்துள்ளார். 

image


Advertisement

அது தொடர்பான ட்வீட்களையும் தரூர் இணைத்துள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close