[X] Close

தமிழ்நாட்டில் புதிதாக 5,755 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

5755-People-Tested-Positive-for-COVID19-in-Tamil-Nadu-State-Today

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,755 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 150 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 8,132 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 47,318 பேர் சிகிச்சையில் உள்ளனர். 


Advertisement

பாதிக்கப்பட்ட 5,755 பேரில் இருவர் மூவர் ஆந்திர மாநிலத்தையும், ஒருவர் ஒடிசாவையும் சேர்ந்தவர். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 24,55,332 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

image


Advertisement

தலைநகர் சென்னையில் 350 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் (398), திருப்பூர் (361), தஞ்சாவூர் (277), செங்கல்பட்டு (251) மற்றும் நாமக்கல் (228) ஆகிய மாவட்டங்கள் மாநில அளவில் நோய் தொற்று பாதிப்பில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 


Advertisement

Advertisement
[X] Close