122 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக தெரிவித்த டிடிவி தினகரன், கட்சியில் எப்போது யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்போது எடுப்பேன் என கூறியுள்ளார்.
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "தாய் ஸ்தானத்தில் உள்ள சசிகலாவிடம் சிறையில் நலம் விசாரித்தேன். சிறையில் சசிகலாவிற்கு எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை. முன்னால் அரைமணி நேரம் காத்திருந்தால் இப்போது ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. சசிகலாவிற்கு பழங்கள்தான் கொடுத்தேன். அங்கு பைவ் ஸ்டார் ஹோட்டல் ஏதும் இல்லை. சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறிய ரூபா மீது நிச்சயம் வழக்கு தொடுக்கப்படும்.
நிச்சயம் அதிமுக தலைமைக் கழகம் செல்வேன். செல்லும் நேரம் குறித்தும் உங்களுக்கு தெரிவிப்பேன். கட்சி 3 மாதமாக செயல்படமால் இருக்கிறது. அதனை செயல்பட வைப்பது என் முதல் கடமை. 122 எம்எல்ஏ-க்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது. எப்போது, யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்போது நடவடிக்கை எடுப்பேன். அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு அதில் தெரிவிப்பேன் என்றார்.
கமல்ஹாசன் அரசியலுக்கு வருவேதா, வராததோ அவர் விருப்பம். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் நல்லதுதான். தமிழக மக்களுக்கு யார் வேண்டுமானாலும் சேவை செய்யட்டும். சிறந்த நடிகர் என்கிற முறையில் கமல்ஹாசன் மீது நல்ல மரியாதை உண்டு. அவர் நல்ல சிந்தனையாளர்" என்றும் டி.டி.வி.தினகரன் கூறினார்.
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!