[X] Close

சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்து சாதனையை சமன் செய்த ரொனால்டோ

விளையாட்டு

Ronaldo-equaled-the-record-for-most-goals-in-an-international-football-match

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ, சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார்.


Advertisement

யூரோ கோப்பை கால்பந்து தொடரில், இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில், நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி, உலகக் கோப்பை சாம்பியன் பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

image


Advertisement

இப்போட்டியில், போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ பெனால்டி கிக் வாய்ப்பு மூலம் 2 கோல்களை அடித்தார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில், 109 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ, ஈரான் வீரர் அலி டேய் சாதனையை சமன் செய்தார்.

image

மேலும், யூரோ கோப்பை தொடரில் 14 கோல்கள் அடித்து, புதிய சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் பிரான்ஸ் சார்பில் கரீம் பென்சீமா 2 கோல்கள் அடித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 6 ஆண்டுகள் கழத்து அவர், தனது அணிக்காக கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close