[X] Close

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் ஆர்யா

சினிமா

Actor-arya-got-vaccinated

நடிகர் ஆர்யா இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.


Advertisement

 ’கொரோனாவிலிருந்து, நம்மை காக்கும் ஆயுதமாக தடுப்பூசிகள் விளங்குகின்றன’ என்று மருத்துவத்துறையினர் பரிந்துரைக்கின்றனர். அதன்படி, இந்திய மக்கள் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு வருகின்றனர். அதேசமயம், தடுப்பூசிகள் குறித்த தவறான வதந்திகளால் மக்கள் அச்சப்பட்டு தவிர்த்தும் வருகின்றனர். இதனால், மக்களின் அச்சங்களை போக்குவதோடு, தங்களையும் காத்துக்கொள்ள திரைத்துறையினர், அரசியல்வாதிகள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதோடு, அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் இன்று நடிகர் ஆர்யா கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

image


Advertisement

இதற்கு முன்னதாக, நடிகர்கள் கார்த்தி, சூர்யா, இயக்குநர் பிரஷாந்த் நீல், விக்னேஷ் சிவன், நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படம் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close