Published : 02,Aug 2017 02:22 PM

தோனி ஒரு லெஜண்ட்… புகழும் வங்கதேச இளம் வீரர்

Sabir-Rahman-praises-MS-Dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஒரு லெஜண்ட் என்று வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் புகழ்ந்துள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியின் போது எடுத்த செல்ஃபியை ஃபேஸ்புக் பக்கத்தில் தற்போது சபீர் அகமது பதிவிட்டுள்ளார். உலகின் லெஜண்ட் எம்.எஸ்.தோனியுடன் என்ற கேப்ஷனுடன் அவர் பதிவிட்டுள்ள அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த செல்ஃபிக்கு 78,000-த்துக்கும் மேற்பட்டை லைக்குகள் கிடைத்துள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகிரவும் செய்துள்ளனர். சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அந்த போட்டியில் 19 ரன்கள் குவித்த சபீர் அகமது, வங்கதேச அணிக்காக இதுவரை 43 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்