Published : 21,Jun 2021 02:52 PM

டோக்கியோவில் ஓலிம்பிக் வீரர்களுக்கான பிரமாண்ட குடியிருப்பு தயார்

Players-village-set-up-in-Tokyo-ahead-of-Olympics-for-participants

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீர்களுக்கான குடியிருப்பு மிகப்பிரமாண்டமாக தயாராகியுள்ளது.

கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் 23 ஆம் தேதி தொடங்குகின்றன. இதில் பங்கேற்கும் 11,000 வீரர்கள் தங்குவதற்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. குடியிருப்பில் தங்கும் வீரர்களுக்கு நாள்தோறும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு தவிர, மரவேலைப்பாடுகள் நிறைந்த ஒரு "ஷாப்பிங்" இடமும் உள்ளது.

அங்கு அஞ்சலகம், ஏடிஎம், கூரியர் அலுவலகம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வீரர்கள், தனித்தனியே உணவு உண்ணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக 4,500 பேர் உட்கார்ந்து உணவருந்தும் வகையில் மிகப்பெரிய சாப்பாடு கூடம் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது. போட்டிகளின் போது, பாடுவதற்கும், முழக்கமிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்