Published : 02,Aug 2017 05:11 AM

முரசொலிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழிசை - ஸ்டாலினுக்கு கடிதம்

Tamizhisai-wrote-a-letter-to-MK-Stalin

முரசொலி நாளிதழின் பவளவிழாவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொட‌ர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி வைத்துள்ள வாழ்த்து மடலில், 75 ஆண்டுகள் கடந்தும் வலிமையானதொரு நாளிதழாக வெளிவந்து கொண்டிருக்கும் முரசொலி தமிழ‌க அரசியல் வரலாற்றில் சிறப்பானதொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி பத்திரிகை 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி அன்று தொடங்கியது. இந்த முரசொலி பத்திரிக்கையின் 75-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10 மற்றும் 11 -ம் தேதிகளில் பவளவிழா நடைபெற உள்ளது. இதில் கமல்ஹாசன், வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கலந்துக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்