[X] Close

'கொரோனா தடுப்பூசி திட்டத்தில் வயதுவாரி நடைமுறைகள் இனி இருக்காது': பிரதமர் மோடி

கொரோனா வைரஸ்,வீடியோ ஸ்டோரி

கொரோனா தடுப்பூசி போடும் நடைமுறைகளில் இனி வயது வாரியாக வித்தியாசம் இருக்காது என்றும் வரும் 21ஆம் தேதி முதல் அனைத்து வயதினரும் ஒரே மாதிரி கருதப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Advertisement

45 வயதுக்கு கீழானவர்கள், மேலானவர்கள் என இரு வகையாக பிரித்து தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் இனி அந்த வித்தியாசம் கைவிடப்படுகிறது. ஜூன் 21ஆம் தேதி புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வரும் நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா சிகிச்சை வழிமுறைகளை கற்றுக்கொடுக்கவும் ஏற்னவே உள்ள சிகிச்சை திறனை அதிகரிக்கவும் ஒரு லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் இவ்வாறு பேசினார். ஆரம்ப நிலை நோயாளிகள், மிதமாக பாதித்த நோயாளிகள், தீவிர சிகிச்சை நோயாளிகள், மருத்துவ சாதனங்களை கையாளுதல் உள்ளிட்ட அடிப்படைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ஆவது அலை சில மாதங்களில் தொடங்கும் என எச்சரிக்கைகள் வெளியாகி வரும் நிலையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close