Published : 18,Jun 2021 09:03 PM

16 வயது சிறுமியை 40 வயது நபருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே 16 வயது சிறுமிக்கு கட்டாயத்திருமணம் செய்து வைக்க முயன்ற பெற்றோர் மீது பெண் புகார் அளித்துள்ளார்.

தணிகை போளூரைச் சேர்ந்த வெங்கடேசன்- புனிதா தம்பதியின் 16 வயது மகளுக்கு பனப்பாக்கத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபருடன் திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதுதொடர்பாக குழந்தைகள் நல காப்பகத்தில் சிறுமி புகார் அளித்ததையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. 5 மாதங்களுக்கு முன் சிறுமியின் தந்தை இறந்தநிலையில், சிறுமிக்கு மீண்டும் அதே நபருடன் திருமணம் செய்துவைக்க தாய் முயற்சி செய்துள்ளார். தாய் அடித்து துன்புறுத்துவதாக மீண்டும் சிறுமி குழந்தைகள் நல மையத்தில் புகார் தந்ததையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், 2 லட்சம் ரூபாய் கடனுக்காக 16 வயது மகளை 40 வயது நபருக்கு திருமணம் செய்துவைக்க தாய் முயற்சிப்பதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதன்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்