Published : 17,Jun 2021 05:19 PM

பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

m-k-stalin-meet-with-modi-in-delhi-today

டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

முதல்வருடன் நீர்வளத்துறைஅமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோருடன் சென்றுள்ளனர். இந்த சந்திப்பின்போது தமிழகம் தொடர்பான முக்கிய திட்டங்கள் குறித்து இருவரும் பேச இருக்கிறார்கள். மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத்தொகை குறித்தும், நீட் தேர்வு குறித்தும், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்தும், முதல்வர் ஆலோசிக்க இருக்கிறார். 15 லிருந்து 20 நிமிடங்கள் இந்த சந்திப்பில் பேச இருக்கிறார்கள் என தகவல்வெளியாகியுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணி அளவில் டெல்லி விமான நிலையம் சென்றார். அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றார். டெல்லி சென்ற முதலமைச்சருக்கு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து டெல்லியில் கட்டப்படும் திமுக அலுவலகத்திற்குச் சென்று, பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக வளர்ச்சித் திட்டங்கள், நீட் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் எடுத்துரைக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. பிரதமருடன் சந்திப்பின்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்