[X] Close

'அப்பா திட்டுவதால் சிறை செல்ல முடிவு' - பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

இந்தியா,குற்றம்

Youngester-wants-to-go-to-jail--so-he-made-death-threat-to-PM-modi

தன்னுடைய அப்பா திட்டிக்கொண்டே இருப்பதால் சிறைக்குச் செல்ல முடிவெடுத்து, பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 22 வயது இளைஞரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று நள்ளிரவு டெல்லி காவல் துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மர்ம நபரொருவர் பிரதமர் மோடியை தான் கொல்லப் போவதாக தெரிவித்துள்ளார்.


Advertisement

அழைப்பு வந்த எண்ணை கொண்டு சம்பந்தப்பட்ட இடத்தை கண்டறிந்த டெல்லி காவல்துறையினர் டெல்லியில் கஜூரி ஹாஸ் என கண்டறிந்து உடனடியாக மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யும் பணியில் இறங்கியது. அழைப்பு விடுத்த நபர் 22 வயதான சல்மான் என அழைக்கப்படும் அர்மான் என கண்டறிந்த காவல்துறையினர் அவரை உடனடியாக கைது செய்தனர்.

image


Advertisement

விசாரணையின் பொழுது தான் சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் இவ்வாறு அழைத்ததாக கூறியுள்ளார். காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தபோது கடுமையான போதையில் அவர் இருந்திருப்பதும் தன்னை தன் அப்பா எப்பவும் எப்பொழுதும் திட்டிக் கொண்டே இருப்பதால் தனக்கு வீட்டில் இருப்பதை விட சிறையில் இருப்பது தான் பிடித்திருக்கிறது என கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த விவகாரத்தில் பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் இளைஞருக்கு போதைப் பொருள் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என டெல்லி காவல்துறையினர் கூறியிருக்கின்றனர்.

image


Advertisement

கைது செய்யப்பட்டுள்ள நபர் ஏற்கனவே கொலை குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்த இந்த நபர். கடந்த 2018 ஆம் ஆண்டு தான் அங்கு இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- நிரஞ்சன் குமார்


Advertisement

Advertisement
[X] Close