Published : 31,Jul 2017 06:26 AM
ரக்ஷா பந்தன் பரிசு: கழிவறை கட்டிக்கொடுத்த சகோதரர்கள்

உத்தரப் பிரதேச மாநில இளைஞர்கள் ரக்ஷா பந்தன் பரிசாக தங்களது சகோதரிகளுக்கு கழிவறைகளை கட்டிக் கொடுத்துள்ளனர்.
பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது தான் ரக்ஷா பந்தன். வட இந்தியாவில் இந்நிகழ்ச்சி பிரபலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் விழா, ஆகஸ்ட் 7 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினத்தன்று சகோதரர்கள், ரக்ஷா பந்தன் கயிறு கட்டும் சகோதரிகளுக்கு ஏதேனும் ஒரு பொருளை பரிசாக வழங்குவது வழக்கம்.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்ட இளைஞர்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் நிகழ்வான ரக்ஷா பந்தன் நாளில் அந்த மாவட்டத்தில் உள்ள தங்கள் சகோதரிகளுக்காக கழிவறையை கட்டிக்கொடுத்துள்ளனர். சுமார் 854 இளைஞர்கள் இணைந்து இந்தப் பணியை நிறைவேற்றியுள்ளனர். கழிவறை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அந்த இளைஞர்களுக்கு மானியம் வழங்குகிறது. கிராமப்பகுதியில் உள்ள பெண்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுப்பதற்காகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதற்காகவும் கழிவறைகள் கட்டுவதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.