[X] Close

சம்பளம் கேட்டதற்கு பெண்ணின் கழுத்தை வெட்டிய டீம் லீடர்

Team-Leader-who-cut-the-girl-s-neck-for-a-salary

மும்பையில் ஊதியம் கேட்டதால் டீம் லீடரால் பெண்ணின் கழுத்து மற்றும் முகம் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

மும்பையை சேர்ந்தவர்கள் காஜல் ஷிண்டே மற்றும் சித்ரா. அக்கா தங்கையான இவர்கள் தங்கள் அப்பா அம்மாவுடன் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இருவரும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த நிலையில் விடுமுறை நேரத்தில் வேலைக்கு செல்லலாம் என முடிவெடுத்து அங்கிருந்த டெலிகாம் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். ஆளுக்கு மாதம் 7000 ரூபாய் சம்பளம் என பேசப்பட்டிருந்தது. வேலை பார்த்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் அவர்களுக்கு கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. இதனால் வேலையை விட்ட அவர்கள், தாங்கள் வேலை பார்த்ததற்காக ஒரு மாத சம்பளத்தை கேட்டிருக்கின்றனர். ஆனால் இவர்களின் டீம் லீடர் 15 நாட்கள் கழித்துத்தான் சம்பளம் வரும் என தெரிவித்திருக்கிறார். மீண்டும் 15 நாட்கள் கழித்து கேட்ட போது 2 நாட்கள் அவகாசம் சொல்லப்பட்டிருக்கிறது.

பின்னர் ஒருநாளில் இருவரையும் மால் ஒன்றுக்கு வரும்படியும் அங்கு வைத்து சம்பளத்தை தருவதாகவும் கூறியிருக்கிறார் டீம் லீடர் கைக்வாத். பின்னர் மாலின் மேல்தளத்திற்கு அவர்களை அழைத்த போது சகோதரிகளில் ஒருவர் மட்டும் சென்றிருக்கிறார். அங்கு வைத்து சம்பளத்தை கேட்ட போது,  ஏற்கனவே நின்றிருந்த இரண்டு பேர் அப்பெண்ணை கத்தியால் முகத்தையும் கழுத்தையும் வெட்டியிருக்கின்றனர். இதனால் ரத்தம் சொட்ட சொட்ட சம்பவ இடத்திலிருந்து கீழே தப்பித்து வந்த அப்பெண் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனை சென்றிருக்கிறார். குற்றம்சாட்டப்பட்ட டீம் லீடர் கைக்வாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Advertisement
Related Tags : மும்பைஊதியம்MumbaiSalary

Advertisement

Advertisement
[X] Close