[X] Close

கோவையில் 23பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!

dengue-fever-attacked

கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 23 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement

கோவையில் இதுவரை 183 பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பரவும் இடங்களில் அரசு சார்பில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிபுணர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பட்டு, நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க கூடுதலாக ரத்தம் தேவைப்படுவதால், தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close