[X] Close

சேலம்: 500 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Salem-Covid-care-Centre-is-equipped-with-500-oxygen-bed-is-opened-and-inspected-by-Chief-minister-MK-Stalin
சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக இரும்பாலையில் ஆக்சிஜன் வசதியுள்ள 500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 
கொரோனா சிகிச்சை மையத்தில் செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் குழாய் இணைப்பு ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரைச் சந்தித்த முதுநிலை மருத்துவர்கள் கொரோனா சூழலில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்தனர்.

image
கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவரும் இருமுறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா எனக் கேட்டறிந்தார். சேலம் உருக்காலையில் இருந்து சிகிச்சை மையத்துக்கு ஆக்சிஜன் வழங்கும் நடைமுறைகள் குறித்து உருக்காலை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

Advertisement

Advertisement
[X] Close