[X] Close

பொதுமுடக்கம்: முதல் நாளன்று விதிகளை காற்றில் பறக்கவிட்ட மக்கள்!

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும் பலர் அதனை மதிக்காமல், விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டனர்.

மதுரை - தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பொதுமுடக்க விதிகளை மக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா? என்பதை காவல்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். ஒலிபெருக்கிகள் மூலமும் மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 12 மணிக்கே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டாலும், வாகனங்களில் பலர் சாலைகளில் சுற்றித்திரிந்தனர். காவல்துறையினரும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. விதிகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். தேனி நகரில் அத்தியாவசியமின்றி சாலையில் சுற்றிதிரிபவர்களை பிடித்து காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.


Advertisement

முகக்கவசம் இன்றி செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மதுரையில் பொதுமுடக்க விதிகளை பின்பற்றாமல் பலர் பொழுதுபோக்கிற்காக வெளியே சுற்றி வருகின்றனர். சிறுவர்கள் கூட்டமாக மிதிவண்டியில் நகரை வலம் வருவது, ஆற்றில் குளித்து விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close