[X] Close

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் வாழ்த்து!

தமிழ்நாடு

Mayilam-pommabura-aathinam-wishes-to-chief-minister-mk-stalin

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு க ஸ்டாலினுக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு சிவஞான பாலைய சுவாமிகள் திருமடம் மயிலம் பொம்மபுர ஆதீனம் வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், "சாதுக்கள் சகவாசமும் சாஸ்திர விசாரணையும் திருவருளாலும் குருவருளாலும் மென்மேலும் பெருக. தமிழக முதல்வராக தாங்கள் பெரும்பான்மையுடன் மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறோம்.

'மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை


Advertisement

என்நோற்றான் கொல் எனுஞ்சொல்'

எனும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என நீங்கள் உச்சரித்தது தங்கள் தந்தைக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. தமிழர்கள் முன்னோர்கள் ஆகியோரை மதித்து திறம்பட செயல்பட்டவர் கருணாநிதி. தங்கள் ஆட்சியில் வளர்ச்சிப் பாதையை அடையும் தமிழகம் என்பதில் பெரு நம்பிக்கை கொண்டோம். மயிலம் முருகன் அருளால் மென்மேலும் வளர்க என வாழ்த்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close