[X] Close

திருப்புமுனை ஏற்படுத்திய ஹர்ப்ரீத்! பெங்களூரை 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப்!

ஐபிஎல் திருவிழா

Punjab-Kings-won-by-34-Runs-against-Royal-Challengers-Bangalore-in-the-league-match-number-26-of-the-IPL-2021

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி விளையாடிய நடப்பு ஐபிஎல் சீசனின் 26வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. முதலில் பேட் செய்த அணி 179 ரன்களை எடுத்தது. 180 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது பெங்களூர். 


Advertisement

கேப்டன் விராட் கோலி மற்றும் படிக்கல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். படிக்கல் 7 ரன்கள் மட்டுமே எடுத்து மெரிடித் வீசிய மூன்றாவது ஓவரில் கிளீன் போல்ட் ஆனார். தொடர்ந்து பட்டிதர் நிதானமாக விளையாடினார். 

பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசினர். அவர்கள் கோலி மற்றும் பட்டிதரை கட்டுப்படுத்தி பிரஷரை ஏற்றி விட்டனர். அதன் பலனாக ஹர்பிரீத் வீசிய 11வது ஓவரில் கோலி மற்றும் மேக்ஸ்வெல் கிளீன் போல்ட்டாகி வெளியேறினர். டிவில்லியர்ஸும் ஹர்பிரீத் வீசிய 13வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

 

தொடர்ந்து பட்டிதர், ஷபாஸ் அகமது, டேனியல் சாம்ஸ் விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் ஹர்ஷல் பட்டேல் தனது பெட்டில் சில ஷாட்களை கனெக்ட் செய்தார். 

முடிவில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே எடுத்தது பெங்களூர் அணி. அதன் மூலம் பஞ்சாப் அணி 34  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close